Last Updated:
நாம் செய்யும் ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் 4 அல்லது 6 இலக்க UPI PIN-ஐ என்டர் செய்ய வேண்டும். இது பணம் செலுத்துவது சரியான யூசரால்தான் செய்யப்படுகிறதா என்பதை சரிபார்க்கிறது.
யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் எனப்படும் UPI நம்முடைய தினசரி பரிவர்த்தனைகளின் போக்கை வெகுவாக மாற்றியமைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியே செல்லும்போது, நாம் அனைவரும் பணத்தை எடுத்துச் சென்ற சூழலில், தற்போது மொபைல் ஃபோனை மட்டுமே எடுத்துக்கொண்டு போனால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது முதல் ஒருவருக்கு பணம் அனுப்புவதுவரை, ஒரு சில விநாடிகளில் பரிவர்த்தனைகளை முடிக்க UPI நமக்கு உதவுகிறது. இதற்கு நமக்கு தேவையானது குறிப்பிட்ட அக்கவுன்ட்டில் போதுமான பணத்தோடு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது UPI ஐடி மட்டுமே.
நாம் செய்யும் ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் 4 அல்லது 6 இலக்க UPI PIN-ஐ என்டர் செய்ய வேண்டும். இது பணம் செலுத்துவது சரியான யூசரால்தான் செய்யப்படுகிறதா என்பதை சரிபார்க்கிறது. இந்த PIN-ஐ செட் செய்ய யூசரின் டெபிட் கார்டு பயன்படுத்தப்பட்ட நிலையில், டெபிட் கார்டு இல்லாமல் UPI பின் செட் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், இப்போது இதற்கு மற்றொரு வழி உள்ளது. நேஷனல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா UPI PIN-ஐ செட் செய்ய இரண்டு ஆப்ஷன்களை வழங்குகிறது என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. நீங்களும் இதில் ஒருவரா? அப்படியென்றால், டெபிட் கார்டின்றி UPI பின் செட் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
UPI பின் செட் செய்வதற்கு டெபிட் கார்டை தவிர உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தலாம். ஆதார் மூலம் UPI PIN-ஐ செட் செய்ய கீழ்காணும் இரு விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பர் உங்கள் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதையும் படிக்க: ஆன்லைனில் பிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கிளைம் நிராகரிக்கப்பட்டதா…? மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி…?
மேற்கண்ட இரு நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்திருக்கிறீர்கள் என்றால் டெபிட் கார்டு இல்லாமல் UPI PIN-ஐ செய்வதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
- உங்கள் UPI ஆப்-ஐ ஓபன் செய்து உங்கள் பேங்க் அக்கவுன்ட் விவரங்களை என்டர் செய்யவும்.
- UPI PIN-ஐ செட் செய்வதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது ஆதார் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- வெரிஃபிகேஷனிற்காக உங்கள் ஆதார் நம்பரின் முதல் 6 டிஜிட்ஸ்களை என்டர் செய்யவும்.
- இதனைத் தொடர்ந்து உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு UIDAI-லிருந்து வரும் OTP-ஐ என்டர் செய்யவும்.
- பின்னர் நீங்கள் உங்களுக்குத் தேவையான UPI PIN-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து வங்கியிலிருந்து உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ என்டர் செய்து, பிறகு நீங்கள் ஏற்கனவே கொடுத்த UPI PIN-ஐ மீண்டும் என்டர் செய்து உறுதிப்படுத்தவும்.
March 24, 2025 6:04 PM IST


