04
ஆகாஷ் மத்வால் மட்டுமல்ல, தற்போது இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களாக உள்ள ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அவரின் அண்ணன் க்ருனால் பாண்டியா என அனைவரும் இந்த Scouting குழுவின் கண்டுபிடிப்புகள் தான். உலகெங்கும் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிப்பதே இந்த Scouting குழுவின் பணி. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் தலைமையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாகீர் கான், பார்த்தீவ் படேல், வினய் குமார், கிரண் மோர், ராகுல் சங்வி, ஆர்.பி. சிங், டி.ஏ. சேகர் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.


