Last Updated:
சுஷாந்த் சிங் மரணம் தற்கொலைதான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சிபிஐ அறிவித்துள்ளது.
சுஷாந்த் சிங் மரணம் கொலை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், தற்கொலைதான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங்.
இவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் வழக்கில் அனைத்து கோணங்களிலும் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.
அவரது கொலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து தகவல்களும் தவறானவை எனவும், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சிபிஐ இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 23, 2025 7:48 AM IST


