Last Updated:
சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, முன் சக்கரம் இல்லாமலேயே தரையிறக்க முடிவெடுத்து, கரடுமுரடான ஓடுபாதையில் தரையிறக்கினார். பாராசூட் உதவியுடன் தரையிறங்கிய போர் விமானத்தின் கீழ் பகுதியில் உராய்வு ஏற்பட்டு, கடும் சேதமடைந்தது.
ரஷ்யாவில் போர் விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியர் செயலிழந்த நிலையிலும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.
சுகோய் SU34 என்ற அந்த போர் விமானத்தை தரையிறக்க முற்படும் போது, திடீரென தரையிறங்கும் சக்கரம் செயல்படவில்லை. அந்த நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, முன் சக்கரம் இல்லாமலேயே தரையிறக்க முடிவெடுத்து, கரடுமுரடான ஓடுபாதையில் தரையிறக்கினார். பாராசூட் உதவியுடன் தரையிறங்கிய போர் விமானத்தின் கீழ் பகுதியில் உராய்வு ஏற்பட்டு, கடும் சேதமடைந்தது.
What a LANDING! SU-34 safely makes it on the runway without landing gear pic.twitter.com/xApkEXlP0u
— RT (@RT_com) March 22, 2025
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டிருந்த நிலையில், நல்வாய்ப்பாக விமானம் விபத்தில் சிக்கவில்லை.
March 23, 2025 1:26 PM IST


