எப்போதும் ரசிகர்களால் ஆவலாக எதிர்ப்பார்க்கப்படும் இந்த சென்னை – மும்பை போட்டி, இந்த ஆண்டும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், இன்று நடைபெறுகிறது.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சாஹர் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை இதுவரை 37 முறை எதிர்கொண்டுள்ளது. அவற்றில் மும்பை அணி இதுவரை 20 வெற்றிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 முறையும் வெற்றிபெற்றுள்ளது.
பிட்ச் எப்படி இருக்கும்?
சேப்பாக்கம் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும். இது சீசனின் தொடக்கம் மட்டுமே என்பதால், ரசிகர்கள் இந்த மைதானத்தில் நிறைய ரன்களை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த போட்டியில் பனி பெய்ய வாய்ப்புகள் உள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுக்கம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 7 போட்டிகள்..!
வானிலை முன்னறிவிப்பு:
மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது சேப்பாக்கத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகலில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், இது இரவில் 28 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 15 கிமீ முதல் 25 கிமீ வரை இருக்கும். இதனால் மழை பெய்ய 24 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
CSK vs MI: சாத்தியமான XI:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (C), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, சிவம் துபே, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, MS தோனி (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், மத்தீஷா பதிரானா
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (WK), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், கார்பின் போஷ், கர்ண் சர்மா, தீபக் சாஹர், டிரென்ட் போல்ட்
March 23, 2025 8:41 AM IST
CSK vs MI | சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் இன்று மோதல்..! பிட்ச், வானிலை நிலவரங்கள் என்ன? பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

