கோதுமை மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதியை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இடைநிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமையினால் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு அல்லது கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

&w=1200&resize=1200,675&ssl=1)