Last Updated:
கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் மராத்திய அமைப்பினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சிக்கமகளூரில் கடைகளை மூடச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
மராத்திய அமைப்பினரை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிக்கமகளூரில் திறந்திருந்த கடைகளை கன்னட அமைப்பினர் அடைக்கச் சொன்னதால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராத்தியில் பேச மறுத்த அரசுப் பேருந்து நடத்துநர் மீது மராத்திய அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின.
அதேநேரம் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியாவில் மராத்திய அமைப்பினரைக் கண்டித்து கன்னட அமைப்பினர் பயிர்களை கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர்.
தும்கூரில் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
#WATCH | Karnataka: Pro-Kannada activists make people shut down shops in Chikkamagaluru amid the 12-hour bandh called by pro-Kannada organisations. The bandh has been called in protest against the alleged assault on a bus conductor in Belagavi for not speaking Marathi. pic.twitter.com/WLMnvkeETB
— ANI (@ANI) March 22, 2025
சிக்கமகளூர் பேருந்து நிலையத்தில் திறந்திருந்த கடைகளை மூடும்படி கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் கடைகளை மூடிவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க : வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
தமிழ்நாடு எல்லையான ஒசூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிற்கு எதிராக முழக்கமிட்டவாறு எல்லையை நோக்கி வர முயன்ற கன்னட அமைப்பினரை அம்மாநில காவல்துறையினர் குண்டுக் கட்டாக கைது செய்தனர்.
Bangalore [Bangalore],Bangalore,Karnataka
March 22, 2025 1:58 PM IST


