சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையான நிலையில், 46 பேர் தீயில் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டின் வல்பரைசோ (Valparaiso) பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த சுமார் 1,100 வீடுகள் தீக்கிரையாகின. மேலும் நூற்றுக்கணக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
இரண்டு நாட்களாக தீ கொழுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், காட்டுத் தீ பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
#BREAKING #Chile Large forest fire reported in Chile. pic.twitter.com/EYG2TDhxKH
— The National Independent (@NationalIndNews) February 2, 2024
இந்த தீ விபத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். தீ பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளை நெருங்க முடியாத அளவுக்கு நெருப்பின் தாக்கம் இருப்பதால் அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
