எக்ஸ் தளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
‘‘காவிரி, முல்லைப் பெரியாறு என, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும், திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகள் முன் நின்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.

