இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒடிசா அமைச்சர் நித்யானந்த கோண்ட் கூறுகையில்,
அதிகப்படியான வெய்யிலின் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் காலை 6.30 முதல் 10.30 மணி செயல்படும் என்று அந்த மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு இன்று முதல் (மார்ச் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதிகரித்துவரும் வெப்பநிலையால் மாணவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பார்த்துக்கொள்ளப் பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படுகிறது. மாணவர்களை வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

