மதுரையில் திடீரென அனைத்து வகையான காய்கறிகள் 50 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய காய்கறி சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்தே காணப்பட்டது.
அதாவது மிளகாய், சின்ன வெங்காயம், பீன்ஸ் போன்ற ஒரு சில காய்கறிகளின் விலையானது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளின் விளைச்சல் குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து மிகவும் அதிகமாக இருப்பதினால் தற்பொழுது அனைத்து காய்கறிகளின் விலை 50 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பீன்ஸின் விலை 60 லிருந்து 70ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 40 ரூபாயாகவும், அவரையின் விலை 45 ரூபாயாகவும், பீட்ரூட் 40 ரூபாயாகவும், காலிபிளவர் 25 ரூபாயாகவும், முட்டைகோஸ் 33 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 40 ரூபாய் ஆகவும், கத்திரிக்காய் ரூ. 30 ரூபாயாகவும் விலை குறைந்து காணப்படுகின்றது.
இதையும் வாசிக்க: பங்குனி உத்திரத்தன்று என்ன சிறப்பு.! அன்று முருகப்பெருமானை வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
அதேபோல் உணவின் அடிப்படை தேவையான தக்காளி 45 இல் இருந்து 55 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது பத்தில் இருந்து 20 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது நாற்பது ரூபாயாகவும் பெரிய வெங்காயம் 35 ரூபாயாகவும் கேரட் 50 ரூபாய் ஆகவும் வெண்டைக்காய் இருபது ரூபாயாகவும் முருங்கைக்காய் 40 ரூபாயாகவும் மிகவும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)