Last Updated:
Israel gaza attack | ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளை விடுவிக்க மறுத்ததால், இஸ்ரேல் தாக்குதல் மீண்டும் தொடங்கியது. 436 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகர் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தரை வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது. இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது.
அதைத்தொடந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க | 6 ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் ஊதியம் பெற்ற நபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட் இதுதான்?
இந்நிலையில், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் தரை வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பை அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
March 20, 2025 10:03 PM IST


