• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் நடந்த பெரும் முறைகேடு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் நடந்த பெரும் முறைகேடு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 20, 2025 10:05 PM IST

தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஆணையத்தால் நியமிக்கப்படும் புதிய முகமையிடம் சுங்கச்சாவடிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் பலகோடி முறைகேடுசுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் பலகோடி முறைகேடு
சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் பலகோடி முறைகேடு

சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை வலுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலில் முறைகேடாக ஈடுபட்ட 14 முகமைகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அட்ராய்லா ஷிவ் குலாம் சுங்கச்சாவடியில் உ.பி சிறப்பு பணிக்குழு சோதனை நடத்தியது. முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தவறிழைத்த முகமைகளுக்கு ‘விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை’ வழங்கியது.

கட்டண வசூல் நிறுவனங்கள் சமர்ப்பித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதற்காக முகமைகள் இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தை மீறியதற்காக ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ‘செயல்திறன் பத்திரங்கள்’ (Performance Securities) பறிமுதல் செய்யப்பட்டு பணமாக்கப்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஆணையத்தால் நியமிக்கப்படும் புதிய முகமையிடம் சுங்கச்சாவடிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை நடவடிக்கைகளில் மிக உயர்வான தரங்களைப் பின்பற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதிபூண்டுள்ளது, மேலும் எந்தவொரு குறைபாடும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் தீர்க்கப்படும். தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அவர்கள் கடுமையான அபராதங்களுடன் நெடுஞ்சாலை திட்டங்களில் இருந்து தடை செய்யப்படுவார்கள்.

First Published :

March 20, 2025 10:05 PM IST

Read More

Previous Post

பணம் கொடுக்காத தாயை கொன்ற மகன்

Next Post

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன் | Suryakumar Yadav to captain Mumbai against CSK

Next Post
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன் | Suryakumar Yadav to captain Mumbai against CSK

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன் | Suryakumar Yadav to captain Mumbai against CSK

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin