Last Updated:
israel attack | இஸ்ரேல்-காஸா போரில் 7 மாத கர்ப்பிணியான அல்-கானென் மற்றும் 13 மாத குழந்தை முகமது பலியாகினர்.
போருக்கு நடுவே பூத்த ஒரு பிஞ்சு, போருக்கே இரையாகி விட்டது என்ற சோகம், குத்துயிரும் குலையுயிருமாக உள்ள காஸாவின் அவல நிலைக்கு சான்று.
இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்த சமயம், கடந்த பிப்ரவரி மாதம் ரஃபாவைச் சேர்ந்த அலா அபு ஹெலாலுக்கும் 20 வயதான அல்-கானெனுக்கும் பிறந்த குழந்தைதான் இந்த முகமது. இஸ்ரேல் வீசிய குண்டுகளால் வீடு வாசல் என அனைத்தையும் இழந்த ஹெலால்-அல் கானென் தம்பதி தங்கள் குழந்தையுடன் கான் யூனிஸுக்கு அருகே முவாசியில் உள்ள மீட்பு முகாமில் தஞ்சமடைந்தனர்.
இதையும் படிங்க | போர் நிறுத்த ஒப்பந்தம்.. டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி!
அல்-கானென் மீண்டும் கருவுற்ற நிலையில், இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்பி சொந்த ஊரான ரஃபாவுக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். நிலைமையை விசாரிக்க ஹெலால் நேரில் சென்றிருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத சமயத்தில் இஸ்ரேல் வீசிய குண்டிற்கு 7 மாத கர்ப்பிணியான அல்-கானெனும் அவரது 13 மாத குழந்தை முகமதுவும் பலியாகினர்.
இஸ்ரேலின் குண்டுகளுக்கு சிதைவடைந்த கூடாரங்களில் இருந்து மகனின் ஆடைகளை எடுத்து கண்ணீர் விட்ட ஹெலால் போன்று, மொத்த குடும்பத்தையும் இழந்தோர் எண்ணிடலங்காதவை.
March 20, 2025 4:48 PM IST


