Last Updated:
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுடனான போரை ஒரு மாதத்திற்கு நிறுத்த ஒப்புக்கொண்டார். 30 நாள் போர் நிறுத்தம் மற்றும் சிறையிலிருந்த 175 பேரை திருப்பி அனுப்புவது முடிவு.
உக்ரைனுடனான போரை ஒரு மாதத்திற்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, உக்ரைனுடனான ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்த நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் களமிறங்கினார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வெளிநடப்பு செய்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பின்னர் டிரம்பின் உத்தரவுகளை ஏற்க முன்வந்தார். 30 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்யா முதலில் அமல்படுத்த வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையையும் அமெரிக்கா ஏற்றது.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் தொடர்ந்த நிலையில், இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதில் உக்ரைனுடனான ஒரு மாத கால போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் இசைவு தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்யா மற்றும் உக்ரைன் சிறைகளில் உள்ள தலா 175 பேரை அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 19, 2025 9:01 AM IST


