இந்த இரு நாட்டின் நட்பைப் பற்றி தெரிந்துகொள்ள சில நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். கி.பி.1700 களில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்தது அமெரிக்கா. பல ஆண்டுகள் சுதந்திரத்திற்காகப் போராடிய அமெரிக்கா ‘1775-1783’ ஆண்டில் பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்கப் புரட்சியை நடத்துகிறது. அதன் விளைவாக 1776-ம் ஆண்டு அமெரிக்க சுதந்திரமடைந்தது. அப்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது பிரான்ஸ். அதன் பிறகு இருநாடுகளும் நட்பு நாடுகளாக பல போர் மற்றும் கொள்கை ஒப்பந்தகளைப் போட்டுக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸுக்கு ஆதரவாக இருந்தது அமெரிக்கா.

இப்படியான பிரான்ஸ் – அமெரிக்கா நட்பின் அடையாளமாக அமெரிக்காவின் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ‘சுதந்திர தேவி’ சிலை 1884 ஆம் பிரான்ஸ் அமெரிக்காவிற்குப் பரிசாக வழங்கியது. பிரான்ஸில் செய்யப்பட்ட இந்த சிலை, 350 பாகங்களாக பிரிக்கப்பட்டு அட்லாண்டிக் கடல் வழியாகக் கப்பலில் அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டு பிரான்ஸால் பரிசளிக்கப்பட்டது. சிலைக்கான பீடத்தை அமெரிக்கா நிறுவ, அதில் ஃப்ரான்ஸால் பரிசாக வழங்கப்பட்ட சிலை நிறுவப்பட்டது.
இந்தச் சுதந்திரதேவி சிலை, நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.

