• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2025 ஏப்ரல் முதல் புதிய TDS விதிகள் நடைமுறை.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
2025 ஏப்ரல் முதல் புதிய TDS விதிகள் நடைமுறை.. முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 3:51 PM IST

வட்டி வருமானத்தை வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும்.

News18News18
News18

புதிய நிதியாண்டு (நிதியாண்டு 2024-25) தொடங்கியவுடன், ஏப்ரல் 1, 2024 முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. குறிப்பாக TDS விதிகளிலும்  சில மாற்றங்கள் வரவிருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024 மூலம் தற்போதுள்ள வரி முறையில் பல சீர்திருத்தங்களையும் புதுப்பிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். முக்கிய மாற்றங்களில் மூத்த குடிமக்கள், முதலீட்டாளர்களை பாதிக்கும் TDS விதிமுறைகளும் அடங்கும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள் மீதான வரிச்சுமையைக் குறைத்து அவர்களின் செலவழிப்பு வருமானத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஏப்ரல் 1, 2025 முதல், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை (FDs), தொடர் வைப்புத்தொகை (RDs) மற்றும் இதே போன்ற திட்டங்களிலிருந்து பெறப்படும் ரூ. 1 லட்சம் வரையிலான வட்டி வருமானத்திற்கு TDS-ல் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.

ஒரு நிதியாண்டில் வட்டி வருமானம் ரூ. 1 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே, TDS கழிக்கப்படும். அந்த வகையில் இது வரவேற்கத்தக்க மாற்றமாக கருதப்படுகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும்.

பொதுமக்களுக்கு, வட்டி வருமானத்திற்கான TDS வரம்பு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு தனிநபரின் வட்டி வருமானம் ஆண்டுதோறும் ரூ.50,000 ஐத் தாண்டினால் மட்டுமே வங்கிகள் TDS-ஐக் கழிக்கும். இது அவர்களின் வைப்புத்தொகையிலிருந்து மிதமான வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

இதையும் படிங்க – உங்களிடம் PF அக்கவுண்ட் இருக்கிறதா? அப்போ நிச்சயம் இதை மறக்காம பண்ணுங்கள்…!

காப்பீட்டு முகவர்களுக்கு, வரம்பு ரூ.15,000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக டிவிடெண்ட் வரி விலக்கு வரம்பையும் பெறுவார்கள். இது ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த மாற்றங்கள் வரி செலுத்துவோர் மீதான வரிச்சுமையைக் குறைப்பதற்கும் இணக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

First Published :

March 19, 2025 3:51 PM IST

Read More

Previous Post

பஞ்சாப் அணியின் கேப்டனாக என் இலக்கு இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்

Next Post

ட்ரம்ப்-ஆல் கசந்த உறவு; நட்பின் பரிசை திரும்ப கேட்கும் ஃபிரான்ஸ்? – சுதந்தர தேவி சிலை வந்த கதை| us Statue of Liberty controversy; France – America war of words | What is the background?

Next Post
ட்ரம்ப்-ஆல் கசந்த உறவு; நட்பின் பரிசை திரும்ப கேட்கும் ஃபிரான்ஸ்? – சுதந்தர தேவி சிலை வந்த கதை| us Statue of Liberty controversy; France – America war of words | What is the background?

ட்ரம்ப்-ஆல் கசந்த உறவு; நட்பின் பரிசை திரும்ப கேட்கும் ஃபிரான்ஸ்? - சுதந்தர தேவி சிலை வந்த கதை| us Statue of Liberty controversy; France - America war of words | What is the background?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin