• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுற்றுலா முதல் ஆராய்ச்சி வரை.. இதுவரை சர்வதேச விண்வெளி மையம் சென்ற வீரர்கள் யார் யார்?

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சுற்றுலா முதல் ஆராய்ச்சி வரை.. இதுவரை சர்வதேச விண்வெளி மையம் சென்ற வீரர்கள் யார் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 12:21 PM IST

சுனிதா வில்லியம்ஸ் 322 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் கழித்துள்ளார். 2000 முதல் 23 நாடுகளைச் சேர்ந்த 280 பேர் ISS சென்றுள்ளனர். ரஷ்ய வீரர் வலேரி பாலியாகோவ் 437 நாட்கள் மிர் மையத்தில் இருந்தார்.

News18News18
News18

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், 322 நாள்களை கழித்துள்ளார். அவர் இதுவரை இரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்துள்ளார். மொத்தமாக 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்நடை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இதுவரை சென்ற வீரர்கள் யார், அவர்கள் எத்தனை நாட்கள் அங்கே தங்கினர் என்பது தெரியுமா?

நாசா விண்வெளி வீரர் வில்லியம் “பில்” ஷெப்பர்ட், ரஷ்ய விண்வெளி வீரர்களான யூரி கிட்சென்கோ மற்றும் செர்ஜி கிரிகலேவ் ஆகியோர் முதன் முதலில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார்கள். அவர்கள் சென்ற விண்கலம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. நான்கு மாத பயணத்தில், அவர்கள் தகவல் தொடர்பு அமைப்புகளை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த மிக வயதான நபர் ஜான் க்ளென் ஆவார், அவர் 1998-ஆம் ஆண்டு, விண்வெளிக்கு டிஸ்கவரி விண்கலத்தில் பறந்தபோது அவருக்கு 77 வயது. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பில் ஓஹியோ செனட்டராகவும் இருந்தவர்.

விஞ்ஞானிகள் மட்டுமன்றி, சுற்றுலாப் பயணிகளும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றுள்ளனர். கடுமையான பயிற்சிகளுக்கு பின்னர், டிட்டோ என்பவர் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டில் பயணித்தார். 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி புறப்பட்ட அவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்தார். அவர் அதற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்தினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாள்கள் தங்கும் முறை 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது. அன்று முதல் 24 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 280 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.

Also Read | விண்வெளி பயணம்.. ஆராய்ச்சிகள்.. குஜராத் தொடர்பு.. யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

மிக நீண்ட காலம் விண்வெளியில் இருந்தவர், ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி பாலியாகோவ். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முன்னோடியான மிர் விண்வெளி நிலையத்தில் 437 நாள்கள், 17 மணி நேரம், 38 நிமிடங்களை கழித்தவர். அவர் பூமியை 7,075 முறை சுற்றியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பொறுத்தவரை, நாசாவின் பிராங்க் ரூபியோ, தொடர்ச்சியாக 371 நாள்களை விண்வெளியில் கழித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். விண்வெளியில் நீண்ட நாள்கள் இருந்த பெண் என்ற பெருமையை பெற்றவர் கிறிஸ்டினா கோச், இவர் 328 நாள்கள் அங்கு தங்கியிருந்தார்.

மொத்தமாக, விண்வெளியில் அதிக நாள்கள் இருந்தவர் பெக்கி விட்சன். அவர் மூன்று குழுக்களில் இடம் பிடித்து 665 நாள்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார். மேலும் ISS-ன் முதல் பெண் கமாண்டர் என்ற பெருமையையும் பெற்றவர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்பவர்கள் “expedition” அல்லது “crew” என அழைக்கப்படுகின்றனர். இதுவரை 72 “crew” சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 19, 2025 12:19 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சுற்றுலா முதல் ஆராய்ச்சி வரை.. இதுவரை சர்வதேச விண்வெளி மையம் சென்ற வீரர்கள் யார் யார்?

Read More

Previous Post

தேன் அடையில் கொட்டும் வருமானம்… மெழுகு பொம்மைகள் செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி…

Next Post

வரி பாக்கியைத் தவணை முறையில் செலுத்த விண்ணப்பிக்கலாம் . | Makkal Osai

Next Post
வரி பாக்கியைத் தவணை முறையில் செலுத்த விண்ணப்பிக்கலாம் . | Makkal Osai

வரி பாக்கியைத் தவணை முறையில் செலுத்த விண்ணப்பிக்கலாம் . | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin