Last Updated:
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் ஆலோசனை நடத்தும் என அறிவித்துள்ளது.
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய உள்துறை செயலர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும்,
இந்த கூட்டத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை அரசியல் சாசன பிரிவு 326 அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சுதந்திர தேவி சிலையை திருப்பி கேட்கும் பிரான்ஸ்.. அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
இது தொடர்பான இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகளுடன் தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 18, 2025 10:12 PM IST


