Last Updated:
அமெரிக்கா 1886ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து பெற்ற சுதந்திர தேவி சிலையை திருப்பி தர வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குளாக்ஸ்மேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சுதந்திர சிலையை அமெரிக்கா திருப்பி வழங்க வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான குளாக்ஸ்மேன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சுதந்திர தேவி சிலையை திருப்பி கொடுங்கள். கொடுங்கோலர்களுடன் சேர்ந்து வாழத் தேர்ந்தெடுத்த அமெரிக்கர்களிடம், அறிவியல் சுதந்திரத்தைக் கோரியதற்காக ஆராய்ச்சியாளர்களை வேலையிலிருந்து நீக்கிய அமெரிக்கர்களிடம் ‘சுதந்திர சிலையை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள்’ என கூறப்போகிறோம். அதை உங்களுக்கு ஒரு பரிசாகக் கொடுத்தோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அறிவியல் சுதந்திரம் கோரியதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களை பிரான்ஸ் தாராளமாக வரவேற்கிறது” என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : அவுரங்கசீப் கல்லறையை அகற்ற போராட்டம்.. நாக்பூரில் வன்முறை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஃபட்னாவிஸ்
இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் துறைச் செயலாளர் கரோலின் லீவிட், “அமெரிக்காவால் தான் பிரெஞ்சுக்காரர்கள் தற்போது ஜெர்மன் பேசுவதில்லை என்பதை அந்த கீழ்த்தரமான பிரெஞ்சு அரசியல்வாதிக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். எனவே, அவர்கள் நமது நாட்டிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்து சுதந்திர சிலையை திரும்ப தருவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
March 18, 2025 8:24 PM IST

