Last Updated:
தெலங்கானாவில் இடஒதுக்கீடு 70% ஆக உயர்த்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
தெலங்கானாவில் இடஒதுக்கீட்டின் சதவிகிதம் 70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி ஆய்வில், இஸ்லாமியர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் 56 புள்ளி 33 சதவிகிதம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தெலங்கானாவில் இடஒதுக்கீட்டின் அளவை 70 விழுக்காடு அதிகரித்து 2 மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி தேர்தலில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 விழுக்காட்டில் இருந்து 18 ஆகவும், பழங்குடியினவர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதத்தில் இருந்து 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read | திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் ஓடுபாதையில் விமானம் நிறுத்தம்!
இது தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளான பாரதி ஜனதா, பாரத ராஷ்ட்ரிய சமிதி என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்த உதவுமாறு அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
March 18, 2025 9:33 AM IST


