• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுவராஜ் சிங் – டினோ பெஸ்ட் வாக்குவாதம் – மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப்போட்டியில் சலசலப்பு..!

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
யுவராஜ் சிங் – டினோ பெஸ்ட் வாக்குவாதம் – மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப்போட்டியில் சலசலப்பு..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 17, 2025 1:35 PM IST

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் வாக்குவாதம்யுவராஜ் சிங் - டினோ பெஸ்ட் வாக்குவாதம்
யுவராஜ் சிங் – டினோ பெஸ்ட் வாக்குவாதம்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் தொடக்க சீசனில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் யுவராஜ் சிங் – டினோ பெஸ்ட் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) ராய்ப்பூரில் நடைபெற்ற லீக்கின் இறுதிப் போட்டியில், இந்தியா மாஸ்டர்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 148 ரன்கள் எடுத்த நிலையில், அம்பதி ராயுடுவின் அதிரடி அரைசதத்தின் மூலம், இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஆனால் இந்த போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மேற்கிந்திய அணி வீரர் டினோ பெஸ்டுடன் வாக்குவாதம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டினோ பெஸ்ட் 3ஆவது ஓவருக்கு அடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து மீண்டும் 13ஆவது ஓவரில் பந்து வீச பெஸ்ட் வந்ததையடுத்து, யுவராஜ் சிங் போட்டி நடுவர்களிடம் புகாரளித்தார். இதையடுத்து யுவராஜ் சிங்கிற்கும், டினோ பெஸ்டுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தை தடுத்து நிறுத்த அம்பத்தி ராயுடு, நடுவர்கள் மற்றும் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா வந்தனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

Lafda with Yuvraj vs Tino best ☠️ #IMLT20Final #YuvrajSingh #IMLT20


pic.twitter.com/FfPJTvOBVt

— CricFreak69 (@Twi_Swastideep) March 16, 2025

இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 50 பந்துகளில் 74 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். ஸ்டூவர்ட் பின்னி 16 ரன்களுடனும், யுவராஜ் சிங் 13 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய மாஸ்டர்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தொடரின் அதிக ரன்கள் குவித்துள்ளார். வாட்சன் ஆறு இன்னிங்ஸ்களில் 195.14 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 361 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும் அடங்கும். மேலும், சுழற்பந்து வீச்சாளர்களான ஆஷ்லே நர்ஸ் மற்றும் சேவியர் டோஹெர்டி ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களாக உள்ளனர்.

First Published :

March 17, 2025 1:35 PM IST

Read More

Previous Post

Puducherry Weather 18 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 26.96°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Gold Rate | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. நகைபிரியர்களுக்கு நீடிக்காத மகிழ்ச்சி

Next Post
Gold Rate | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. நகைபிரியர்களுக்கு நீடிக்காத மகிழ்ச்சி

Gold Rate | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. நகைபிரியர்களுக்கு நீடிக்காத மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin