Last Updated:
Sunita Williams: ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் புதிய குழுவினர் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கான ஏற்பாடுகள் நாளை தொடங்கும் என நாசா அறிவித்துள்ளது.
வெறும் 8 நாட்கள் பயணமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அடங்கிய விண்வெளி வீரர்கள் குழு விண்வெளி நிலையத்துக்கு சென்றது. அந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்குழு திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியாத நிலை உருவானது.
தற்போது, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக புதிய குழுவினர் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து இவ்விரு குழுக்களுக்கு இடையேயான பணிப்பரிமாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் அங்கிய குழு பூமி திரும்புவதற்கான பணிகள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு தொடங்கும் எனவும், சர்வதேச விண்வெளி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலத்தை Unlock செய்யும் பணிகள் காலை 10.15 மணிக்கும் தொடங்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை 2.41 மணியளவில் Deorbit பணிகள் நிறைவு பெற்று, அதிகாலை 3.27 மணியளவில் தரையிறக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ள நாசா, வானிலை சூழலை பொறுத்து காத்திருக்க நேரிட்டால், தரையிறங்க சிறிது தாமதம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
March 17, 2025 8:52 PM IST
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கான ஏற்பாடுகள் நாளை தொடங்கும்.. நாசா வெளியிட்ட அப்டேட்!


