Last Updated:
ஐபிஎல் தொடரை முன்னிட்டு, அனைத்து ஜியோ பயனாளர்களுக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் Unlimited ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு, அனைத்து ஜியோ பயனாளர்களுக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் Unlimited ஆஃபரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜியோ புதிய ஜியோ சந்தாதாரர்களுக்கு தனது புதிய வரம்பற்ற சலுகையை அறிவித்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜியோ பயனர்கள் 299 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யும்போது பின்வரும் நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.
-4K தரத்தில் டிவி மற்றும் மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் வசதியை 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
-800க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 11க்கும் மேற்பட்ட ஓடிடி சேவைகள், Unlimited இணைய வசதி உடன் 50 நாட்கள் இலவச ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை சோதனை அடிப்படையில் பெறலாம்.
இந்த சிறப்பு திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு, 90 நாட்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் வரும் 22ஆம் தேதி முதல் ஆக்டிவேட் செய்யப்படும் எனவும், மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பாக ரீசார்ஜ் செய்த பயனர்கள் 100 ரூபாய்க்கான Add-on பேக்கை தேர்வு செய்யலாம் என்றும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சலுகை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய கூடுதல் விவரங்களை 60008 60008 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அல்லது Jio.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. ஜியோவின் ஆஃபர்களை பெற புதிய சிம் கார்டு வாங்க நினைப்பவர்கள் அருகில் உள்ள Jio ஸ்டோரைப் பார்வையிட்டு முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம் எனவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
March 17, 2025 1:14 PM IST
ஜியோ ஹாட்ஸ்டார் இனி இவர்களுக்கெல்லாம் இலவசம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு.. ஐபிஎல் தொடரை ஃப்ரீயா பார்க்கலாம்!


