• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நான்கு மாதங்கள்… நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே” – பிரதமர் மோடி பகிர்ந்த விரத முறைகள்!

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“நான்கு மாதங்கள்… நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே” – பிரதமர் மோடி பகிர்ந்த விரத முறைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவை சேர்ந்த 41 வயதாகும் அலெக்ஸ் ஃப்ரிட்மேன் என்பவர் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளராகவும், எழுத்தாளராகவும், பாட்கேஸ்டராகவும் இருந்து வருகிறார். இவர் எலான் மஸ்க், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட பலரையும் நேர்காணல் செய்துள்ளார். தற்போது இவர் பிரதமர் மோடியை நேர்காணல் செய்துள்ளார். இந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, தனது உடல் ஆரோக்கியம் குறித்தும் பேசினார். அப்போது கடந்த 50 முதல் 55 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் விரத நடைமுறைகள் தொடர்பாகவும் பேசினார்.

அதில், தான் ஆண்டு முழுவதும் பல்வேறு விரதங்களைக் கடைப்பிடிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட நான்கரை மாதங்கள், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாக வெளிப்படுத்தினார். மேலும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பழம் உண்பதையும் சில நேரங்களில் வெந்நீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தனது உண்ணாவிரத அட்டவணை பிரதமர் மோடி பேசுகையில், “மழைக்காலங்களில், உடலில் செரிமானம் மெதுவாக நடக்கும். எனவே மழைக்கால பருவத்தில், இந்தியாவில் பலர் 24 மணி நேரத்திற்குள் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கி தீபாவளிக்குப் பிறகு நவம்பர் மாதம் வரை, சுமார் நான்கரை மாதங்களுக்கு, 24 மணி நேரத்திற்கு ஒரேயொரு முறை மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளேன்.

வழக்கமாக செப்டம்பர் அல்லது அக்டோபரில் இந்தியாவில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வலிமை, பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தின் பண்டிகை இது. ஒன்பது நாட்கள் நீடிக்கும் இந்த பண்டிகை காலத்தில், நான் உணவை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு வெந்நீரை மட்டுமே குடிப்பேன். வெந்நீர் குடிப்பது எப்போதும் எனது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதி.

Also Read | ஆர்.எஸ்.எஸ் டூ அரசியல்… முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி… நியூஸ் 18-ல் காணத் தவறாதீர்!

பின்னர் மார்ச், ஏப்ரல் மாதங்களில், சைத்ர நவராத்திரி என்று அழைக்கப்படும் மற்றொரு நவராத்திரி வருகிறது. இந்த வருடம், அது மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும். இந்த நவராத்திரியின் ஒன்பது நாள் விரதத்தின் போது, ​​நான் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பழத்தை மட்டுமே சாப்பிடுவேன். உதாரணத்துக்கு பப்பாளியைத் தேர்வு செய்கிறேன் என்றால் ஒன்பது நாட்களுக்கும் பப்பாளி பழத்தைத் தவிர நான் வேறு எதையும் தொட மாட்டேன். அதுவும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவேன். அப்படித்தான் நான் எனது அந்த ஒன்பது நாள் விரத வழக்கத்தைப் பின்பற்றுகிறேன்.

இப்படி வருடம் முழுவதும் நான் ஏராளமான விரதங்களைக் கடைப்பிடிக்கிறேன். விரதங்கள் என் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றிய ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த நடைமுறைகளை கடந்த 55 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன்.” என்று பிரதமர் மோடி கூறினார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 16, 2025 9:37 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || இசைக் கச்சேரியில் வன்முறை;அறுவர் கைது

Next Post

Tamilmirror Online || பொலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

Next Post
Tamilmirror Online || பொலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

Tamilmirror Online || பொலிஸ் பாதுகாப்புடன் O/L பரீட்சை தயார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin