செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது இந்தியா – சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
”சமீபத்தில் (கடந்த ஆண்டு அக்டோபர்) சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை நீட்டிக்கச் செய்வதற்கான பார்வைகளை இருவரும்ப கிர்ந்துகொண்டோம். 2020-க்கு முன்பு எல்லைப் பகுதிகளில் நிலைத்திருந்த அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இருதரப்பிலும் ஈடுபட்டுள்ளோம்.
மெதுவாக, அதே நேரத்தில் நிச்சயமாக எல்லைகளில் இயல்பு நிலை திரும்பும். எல்லைகளில் முன்பு இருந்த அதே உற்சாகம், ஆற்றல் மீண்டும் திரும்பும். ஆனால், இதற்கு நேரம் எடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.
இந்த நவீன உலகில் சீனாவின் பங்கு முக்கியமானது. வரலாற்றுப் பதிவுகளை எடுத்துப் பார்த்தால் சீனாவும் இந்தியாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பாடங்களைக் கற்றுள்ளனர்.

