திமுக உடன் போராட தயார்
அதே போல மத்திய அரசின் முன்மொழிக் கொள்கைக்கு தேமுதிக ஆதரவாக உள்ளது என்றும், தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தொகுதி வரையறை என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக எதிர்த்துப் போராடும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

