• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Fixed deposit | 9% வரை வட்டி வழங்கும் FD திட்டங்களை தேடுகிறீர்களா…? சிறுநிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் ஒப்பீடு இதோ…!

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Fixed deposit | 9% வரை வட்டி வழங்கும் FD திட்டங்களை தேடுகிறீர்களா…? சிறுநிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் ஒப்பீடு இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 15, 2025 1:36 PM IST

Fixed deposit | சிறிய நிதி வங்கிகள் வழக்கமான வங்கிகளைவிட அதிக வட்டி விகிதங்களை வழங்கினாலும், அவை பெரிய வணிக வங்கிகளிலிருந்து வித்தியாசமாக செயல்படுகின்றன.

News18News18
News18

கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை, 25 அடிப்படை புள்ளிகள் (basis points) குறைத்ததைத் தொடர்ந்து, தங்கள் சேமிப்பின் மீது அதிக வருமானத்தைப் பெற விரும்பும் பல முதலீட்டாளர்கள் FD எனப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வருமானம் அளிக்கக்கூடிய திட்டங்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏனென்றால், ரெப்போ ரேட் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல நிதி நிறுவனங்களும், வங்கிகளும் தங்களின் FD திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவரும் வட்டியை குறைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே, இந்த சூழலில் அதிக வட்டி அளிக்கக்கூடிய FD-க்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, ​​பல சிறு நிதி வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஆண்டுக்கு 9% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

சிறுநிதி வங்கிகள் (Small finance bank) என்றால் என்ன?

ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்ஸ் என்பவை இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட வங்கிகளின் ஒரு சிறப்பு வகையாகும். இந்தியாவில் சிறு நிதி வங்கிகள் (SFBs) ஆனவை சிறு வணிக யூனிட்கள், விவசாயிகள் மற்றும் மைக்ரோ/சிறு நிறுவனங்கள் உள்ளிட்ட வசதியற்ற மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அடிப்படை வங்கி சேவைகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டன. மொத்தத்தில் வங்கி சேவைகளுக்கு குறைந்த அணுகலைக் கொண்ட பிரிவினருக்கு சிறுநிதி வங்கிகள் அத்தியாவசிய வங்கி வசதிகளை வழங்குகின்றன.

தற்போது 9% வரை வட்டியுடன் கூடிய FD திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்களா? கீழ்காணும் சிறு நிதி வங்கிகள் வழங்கும் திட்டங்களைப் பாருங்கள்…

  • யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 1001 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 9% மற்றும் ஓராண்டு FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.85% வட்டி வழங்குகிறது.
  • நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் 18 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 9% வட்டி வழங்குகிறது. ஓராண்டு FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 7% வட்டி இங்கு வழங்கப்படுகிறது.
  • சூரியோதய் சிறு நிதி வங்கி தனது 5 ஆண்டு FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.6% வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில் 1 வருட FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.25% வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
  • உத்கர்ஷ் சிறு நிதி வங்கி தனது 2 முதல் 3 ஆண்டுகள் அல்லது 1,500 நாட்கள் வரையிலான FD-க்களுக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்குகிறது. மேலும் ஆண்டுக்கு 8% வட்டி வழங்கும் ஓராண்டு FD திட்டத்தையும் இது வழங்குகிறது.
  • ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD-க்களுக்கு ஆண்டுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.
  • உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 18 மாத முதிர்வு காலம் கொண்ட FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.25% வட்டியையும், ஓராண்டு FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.1% வட்டியையும் வழங்குகிறது.
  • AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது 18 மாதம் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.1% வட்டியை வழங்குகிறது. அதே நேரம் ஓராண்டு FD திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.25% ஆகும்.

இதையும் படிக்க: Income Tax Return | வருமான வரித்தாக்கல் செய்யாமல் தவிர்த்துள்ளீர்களா…? விரைவில் உங்களுக்கு வரி நோட்டீஸ் வரலாம்…!

சிறுநிதி வங்கிகள் வழங்கும் நிதி சேவைகள் பாதுகாப்பானதா?

சிறுநிதி வங்கிகளில் உள்ள டெபாசிட்கள், DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation)-ஆல் ஒரு டெபாசிட்டருக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகின்றன. எனினும், அதிகபட்ச பாதுகாப்பிற்காக டெபாசிட் தொகையை இந்தக் காப்பீட்டு வரம்பிற்குள் வைத்திருக்க நிதி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சிறிய நிதி வங்கிகள் வழக்கமான வங்கிகளைவிட அதிக வட்டி விகிதங்களை வழங்கினாலும், அவை பெரிய வணிக வங்கிகளிலிருந்து வித்தியாசமாக செயல்படுகின்றன. எனவே, இந்த வித்தியாசம் முதலீட்டாளர்களுக்கு இடர் மேலாண்மையை ஒரு முக்கிய காரணியாக ஆக்குகிறது.

First Published :

March 15, 2025 1:36 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Fixed deposit | 9% வரை வட்டி வழங்கும் FD திட்டங்களை தேடுகிறீர்களா…? சிறுநிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் ஒப்பீடு இதோ…!

Read More

Previous Post

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

Next Post

60வது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான் | Makkal Osai

Next Post
60வது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான் | Makkal Osai

60வது பிறந்தநாளில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர்கான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin