Last Updated:
இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்குதலில் பெண்கள் பெயரில் அசையா சொத்து இருந்தால் ஒரு சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இதில் தமிழக பெண்கள் வளர்ச்சி திட்டத்திற்காக ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் முக்கியமான திட்டமாக 10 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்களுக்கு எந்த அளவில் பயன் தரும் என்பது குறித்து விளக்கம் அளிக்கின்றார் மதுரை பொருளாதார பேராசிரியரான முத்துராஜ்…
பெண்களின் சொத்துரிமை அல்லது சொத்துக்களை பெறும் பொழுது பெண்களுக்கான பெயர் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு என்று நன்மை அளிக்கக்கூடிய திட்டமாக உள்ளது. ஏனென்றால் பெண்களுக்கு சொத்து கொடுப்பது என்பது ஒரு பெரிய செய்தியாக உள்ளது. ஏனென்றால் நகர்ப்புறங்களில் கூட பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை. ஆனால் கிராம பகுதிகளில் பெண்கள் பெயரில் அசையா சொத்துக்களை வாங்கும் பொழுது அதில் பெரிய சிரமங்கள் இருப்பதாகவும் அல்லது முன்னேற்ற வழிகள் இல்லாமலும் இருக்கின்றது. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது, இப்படி ஒரு வளர்ச்சி திட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
பல்வேறு குடும்பங்களில் ஆண்கள் வாங்க கூடிய சொத்துக்களில் பெண்கள் பெயர் மூலமாக ஒரு சதவீதம் கட்டண மானியத்தில் வாங்கும் பொழுது, பெண்கள் முன்னேற்றத்திற்கும், ஆளுமைக்கும் இது ஒரு மறைமுக முயற்சியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் படி (National Crime Records Bureau) பெண்களுக்கான சொத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றது. பெண்களுக்கான சொத்து பற்றிய குற்றங்கள் எல்லாம் அதிகமாக இருக்கின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப் பார்த்தால் பெண்களுக்கான சமூக சொத்து சார்ந்த பிரச்சினைகள் என்பது கிராமப்புறங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
இதன் மூலமாக தற்பொழுது பெண்கள் பெயரில் அசையா சொத்துக்கள் வாங்கினால் ஒரு சதகம் கட்டணம் குறைக்கப்படும் என்பது பெண்களுக்கான நல்ல முயற்சியாக இருக்கின்றது. தற்பொழுது ஒரு சதவீதம் கட்டண குறைப்பு இன்று இருந்தாலும் இதனுடைய தாக்கம் என்பது மிகப் பெரிய விஷயம். நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புற பெண்களுக்கு இதன் மூலமாக மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும் என்கின்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 15, 2025 6:39 PM IST
பெண்கள் பெயரில் அசையா சொத்துக்கள் வாங்கினால் 1% கட்டண குறைவு… இது ஒரு நல்ல முயற்சியே என்கிறார் பொருளாதார பேராசிரியர்…!!

