இந்தக் குடும்பத்தின் பரம்பரையை ஆராய்ந்தால், அது மராட்டியப் பேரரசு வரை செல்கிறது. இவர்களது குடும்பம் நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் தேசிய விவகாரங்களில் ஆழமாக வேரூன்றிய பெயர்களில் சில, இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஜோதிராதித்ய சிந்தியா பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான அரசியல்வாதி ஆவார். இவர் குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜாவான ஜிவாஜிராவ் சிந்தியாவின் பேரனும் ஆவார். இருப்பினும், அவரது மகன் மகாநாராயணன் சிந்தியா அரசியலில் ஈடுபடவில்லை. இவர் தனக்கென ஒரு வித்தியாசமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவரது ஆர்வங்கள் எல்லாம் தொழில்முனைவு, இசை மற்றும் நன்கொடை அளிப்பது ஆகியவையே.
மகாநாராயணன் கல்வி
மகாநாராயணன் சிந்தியா டூன் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். பின்னர், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தொழில்முனைவோர் பணியில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வம் காரணமாக, பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் பணிபுரியத் தொடங்கினார். இங்கு அவர் தொழில்துறைக்குத் தேவையான அனுபவத்தைப் பெற்றார்.
மகாநாராயணன் சிந்தியாவின் பணி அனுபவம்
மத்திய அமைச்சரும், குவாலியர் மகாராஜாவுமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகனுக்கு, பள்ளிப் பருவத்திலிருந்தே விரிவான அனுபவம் உண்டு. யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் சில காலம் பயிற்சியும் பெற்றார்.
இவரது ஆர்வங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பொருளாதாரம் மற்றும் நிதி தவிர, கிறிஸ்டியில் கலையை எவ்வாறு ஆராய்ச்சி செய்வது மற்றும் பட்டியலிடுவது என்பதையும் கற்றுக்கொண்டார். மும்பையில் உள்ள பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதோடு, பூட்டானின் “மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு” என்ற கருத்தை ஆராய்ந்து, அதன் சிக்கல்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க: Fixed deposit | 9% வரை வட்டி வழங்கும் FD திட்டங்களை தேடுகிறீர்களா…? சிறுநிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் ஒப்பீடு இதோ…!
மகாநாராயணன் சிந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனம்
அரசியலில் இருந்து விலகி, விவசாயத்தை மையப்படுத்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் களம் இறங்கினார். மொத்த காய்கறி வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு தளமான “மைமண்டி” (MyMandi) 2022-ம் ஆண்டில் இன்னொரு நபருடன் சேர்ந்து தொடங்கினார். MyMandi நிறுவனம் காய்கறிகளை மொத்தமாக வாங்கி, அதைப் பொட்டலமிட்டு, ஜெய்ப்பூர், நாக்பூர், குவாலியர் மற்றும் ஆக்ராவில் உள்ள தெரு வியாபாரிகளுக்கு விநியோகிக்கிறது. இந்த ஸ்டார்ட்அப் மாதந்தோறும் ரூ.1 கோடி வருவாயை ஈட்டி வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரூ.5 கோடியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜூலை 2023-ல் மைமண்டி தளம் ரூ.4.2 கோடி முதலீடைப் பெற்றுள்ளது.
March 15, 2025 3:57 PM IST
பிரபல அரசியல்வாதியின் மகன்; அருண் ஜெட்லியின் கீழ் பணியாற்றியவர்; சொந்தமாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கியவர்; யார் அவர்?

