• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு நிராகரிப்பு | Bail Plea Of Actor Ranya Rao, Arrested In Gold Smuggling Case, Rejected

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு நிராகரிப்பு | Bail Plea Of Actor Ranya Rao, Arrested In Gold Smuggling Case, Rejected
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான தருண் ராஜு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.

ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்கும், பெரிய நகைக் கடை அதிபர்களுக்கும் தங்கம் கடத்திவந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில், ரன்யா ராவ் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள லேவல்லி சாலை, எம்ஜி சாலை உட்பட 5 இடங் களில் சோதனை மேற்கொண் டனர். ரன்யா ராவுடன் தொடர் பில் உள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தங்க கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி ரன்யா ராவ் தாக்கல் செய்த மனுவை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நட்சத்திர ஹோட்டல் அதிபர் தருண் ராஜு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் தருண் ராஜு கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 3 நாட்கள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



Read More

Previous Post

கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு

Next Post

‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ – வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு | indian cricketer varun chakravarthy rewinds threat post 2021 t20 world cup

Next Post
‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ – வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு | indian cricketer varun chakravarthy rewinds threat post 2021 t20 world cup

‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ - வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு | indian cricketer varun chakravarthy rewinds threat post 2021 t20 world cup

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin