03
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அவரது பிணைப்பு என்பது அவ்வளவு எளிதில் விளக்கமுடியாதது. மற்ற அணிகள் வணிகத்திற்காக வீரர்களை எடுத்து விளையாட வைப்பார்கள் என்றால், இன்றும் உணர்ச்சிக்காக, அந்த பந்தத்திற்காக அணி வீரர்களை தேர்வு செய்து விளையாடுவது சென்னை அணிக்கே உரித்த ஒன்றாகும். தற்போது கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தோனியும் எப்படியோ தெரியாது, ஆனால் 90’ச் கிட்ஸ்களுக்கும், Early 2K கிட்ஸ்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தோனியும் கொடுத்த ஞாபகங்கள் அதிகம். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி, நம்மால் மறக்க முடியாத 7 போட்டிகளை நாம் இங்கு பார்க்கலாம்.


