Last Updated:
ஒட்டுமொத்தமாக இந்த ஃபோட்டோவை 1 கோடியே 60 லட்சம் யூசர்கள் லைக் செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ள நிலையில், அதனை கொண்டாடிய ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அந்த ஃபோட்டோ 1 கோடியே 60 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.
துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது இந்திய அணி கைப்பற்றும் 7 ஆவது ஐசிசி கோப்பை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் அனைத்து வீரர்களும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியடையவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பின்னர் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது 2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெற்றிக்கு பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோப்பையுடன் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சோஷியல் மீடியா பிரபலம் கேபி லேம் (Khaby Lame) போன்று போஸ் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்த ஃபோட்டோவை ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஃபோட்டோ பதிவான 6 நிமிடங்களில் 1 மில்லியன் (10 லட்சம்) லைக்ஸ்களை குவித்தது.
இதையும் படிங்க – டான்ஸ் ஆடி வைப் செய்த தல, சின்ன தல..! தீயாய் பரவும் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்
ஒட்டுமொத்தமாக இந்த ஃபோட்டோவை 1 கோடியே 60 லட்சம் யூசர்கள் லைக் செய்துள்ளனர். அந்த வகையில் அதிவேகமாக 1 மில்லியன் லைக்ஸை பெற்ற இந்திய பதிவு என்ற சாதனையை ஹர்திக்கின் இந்த போஸ்ட் இன்ஸ்டாகிராமில் ஏற்படுத்தியுள்ளது. 2014 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றபோதும் ஹர்திக் பாண்ட்யா இதேபோன்றுதான் போஸ் கொடுத்து பதிவிட்டிருந்தார்.
March 12, 2025 5:46 PM IST


