• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘2023-24 நிதியாண்டில் 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முன்னிலை’ | TN Postal Circle leads with 3.14 crore accounts in the financial year 2023-24

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
‘2023-24 நிதியாண்டில் 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முன்னிலை’ | TN Postal Circle leads with 3.14 crore accounts in the financial year 2023-24
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: “2023-24-ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் உள்ளது” என்று, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2023-24 ம் நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார். அஞ்சலக சேமிப்பு வங்கி, விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்), பார்சல் சேவைகள், சர்வதேச அஞ்சல்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு, பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பரிவர்த்தனைகள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 126 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில், மரியம்மா தாமஸ் பேசிய: “2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் இருந்தது. இந்த நிதியாண்டில் இவ்வட்டம் ரூ.1,316.80 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்ததோடு அனைத்து அஞ்சல் வட்டங்களிடையே 2-வது இடத்தை பெற்றது. இந்த வருவாயில் ரூ.720.39 கோடி நிதிச் சேவைகள் மூலம் ஈட்டப்பட்டது. ரூ.596.41 கோடி அஞ்சல் துறை செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்டது.

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மூலம், 2023-24-ம் நிதியாண்டில் 31.79 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,384 கோடி மதிப்பிலான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி செய்வதற்காக 66 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் ஆதார் சேவை மையம் மூலம், 33.59 லட்சம் பேருக்கு புதிதாக ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அவர் பேசினார்.

இவ்விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், அஞ்சல் சேவை இயக்குனர் மேஜர் மனோஜ், பொது மேலாளர் (அஞ்சல் கணக்கு மற்றும் நிதி) சித்ரஞ்சன் பிரதான், தெற்கு வட்ட அஞ்சல் துறை தலைவர் வி.எஸ்.ஜெய்சங்கர், மேற்கு வட்ட அஞ்சல் துறை தலைவர் ஏ.சரவணன், அஞ்சல் சேவைகள் இயக்குனர் (தலைமையகம்) கே.ஏ.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read More

Previous Post

இந்தியா – மொரிஷியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து; பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது | India-Mauritius sign 8 agreements – PM Modi receives highest national award

Next Post

‘சிங்கிள் பேமென்ட்’ – நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் – பின்னணி என்ன?!

Next Post
‘சிங்கிள் பேமென்ட்’ – நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் – பின்னணி என்ன?!

'சிங்கிள் பேமென்ட்' - நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் - பின்னணி என்ன?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin