• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்ல.. இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் எது? எங்கிருந்து இயக்கப்பட்டது?

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்ல.. இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் எது? எங்கிருந்து இயக்கப்பட்டது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 12, 2025 12:06 PM IST

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது மற்றும் எந்த நகரத்தில் இருந்து இயங்கியது என்று உங்களுக்கு தெரியுமா?.

News18News18
News18

பொதுவாக, ரயில் பயணம் என்பது மகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரயில் பயணங்களின்போது மக்கள் மறக்க முடியாத பல நினைவுகளை உருவாக்குகிறார்கள். மேலும், ரயில் பயணம் உலகெங்கிலும் மிக பழமையான பயண முறைகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே பயணிகளுக்கு அவர்களின் பயணத்திற்காக பல விருப்பங்களை வழங்கியுள்ளது. அதாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், கரிப் ரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் போன்றவை இதில் அடங்கும். இந்நிலையில், இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது மற்றும் எந்த நகரத்தில் இயங்கியது என்று உங்களுக்கு தெரியுமா?.

மும்பையில் போரி பந்தரில் இருந்து தானே வரை ஏப்ரல் 16, 1853 அன்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த வரலாற்று ஓட்டம் இந்தியாவில் ரயில் சேவைகளின் தொடக்கத்தை காட்டியது. அதன் பின்னர் இது உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் இயங்கும் பழமையான பயணிகள் ரயில் பற்றி பார்த்தால், ஹவுரா-கல்கா மெயில் 158 ஆண்டுகளுக்கு முன்பு தனது சேவையைத் தொடங்கியது.

Also Read: உலகின் டாப் 20 மாசுபட்ட நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது.. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.. முழு விவரம் இதோ!

இதனால், இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த ரயில் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள கல்கா நகரத்துடன் இணைக்கிறது. ஹவுரா மற்றும் டெல்லிக்கு இடையே ஜனவரி 1, 1866 அன்று முதன்முதலில் இயக்கப்பட்ட ரயில் ஹவுரா-பெஷாவர் எக்ஸ்பிரஸ் ஆகும். பின்னர் 1891ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து கல்கா வரை நீட்டிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கால ரயிலான ஹவுரா-கல்கா மெயில், ஆரம்பத்தில் கொல்கத்தாவிலிருந்து சிம்லா வரை பயணிக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில், ரயிலின் பெயர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் கிழக்கு இந்திய ரயில்வே மெயில் என்று அழைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்கா மெயில் என்றும், நேதாஜி எக்ஸ்பிரஸ் என்றும் பெயர் மாற்றப்பட்டது.

First Published :

March 12, 2025 12:06 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்ல.. இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் எது? எங்கிருந்து இயக்கப்பட்டது?

Read More

Previous Post

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை

Next Post

மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?

Next Post
மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?

மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ கொடுக்கும் பென்ஷன் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin