• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு | Pakistan train hijack: Security forces kill 16 militants, rescue 104 hostages in ongoing operation

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு | Pakistan train hijack: Security forces kill 16 militants, rescue 104 hostages in ongoing operation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் நேற்று (மார்ச் 11) சிறைபிடித்தது. அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பயணிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடரும், அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகளில் 58 பேர் ஆண்கள், 31 பேர் பெண்கள், 15 பேர் குழந்தைகளாவர். அவர்கள் அனைவரும் இன்னொரு ரயில் மூலம் பாலோசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்தது என்ன? – பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

அப்போது பலுச் விடுதலை படையை (BLA) சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதுவரை 104 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை பயணிகள் ரயிலில் பிணைக் கைதிகளாக இருக்கின்றனர் என்ற சரியான தகவல் தெரியவில்லை. ஏனெனில் ரயிலில் இருந்து சில பயணிகள் இறங்கி இருள் என்று கூட பார்க்காமல் மலைகளுக்கு இடையே ஒளிந்தனர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் 35 பயணிகளை தீவிரவாதிகள் ரயிலில் இருந்து கடத்திச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

PM கிசான் திட்டம்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு குட் நியூஸ்..!

Next Post

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து | Makkal Osai

Next Post
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து | Makkal Osai

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin