Last Updated:
மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா மீது பதிலடி வரி விதிப்பார் என அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ருடோவை பாராட்டிய கார்னி, டெனால்ட் டிரம்பை கடுமையாக சாடினார்.
கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது என அந்நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்கா மீது பதிலடி வரி விதிப்பு விதிக்கப்படும் என்றும் கார்னி அறிவித்துள்ளார்.
சொந்த கட்சியில் செல்வாக்கு சரிந்தால், கடத்த ஆண்டு கனடா (Canada) பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ருடோ. எனினும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் வரை அப்பதவியில் நீடித்தார். இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவராக கனடா வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.
லிபரல் கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில், மார்க் கார்னி சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்பை கடுமையாக சாடினார். கனடாவின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புவதாகவும் இதில், டெனால்ட் டிரம்பை வெற்றிபெற அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். அமெரிக்காவில் மருத்துவம் என்பது வர்த்தகம், கனடாவில் அது மக்களின் உரிமை என்று கார்னி தெரிவித்தார்.
வரி விதிப்பில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு கனடா அரசு தக்க பதிலடி அளித்துள்ளதாகவும், ஜஸ்டின் ட்ருடோவை கார்னி பாராட்டினார். கனடா நாட்டின் மக்களையும் தொழிலாளர்களையும் அமெரிக்கா தாக்குவதாகவும் கார்னி குற்றம்சாட்டினார். 59 வயதான கார்னி, வார இறுதியில் கனடாவின்புதிய பிரதமராக பதவியேற்பார் என தெரிகிறது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான கார்னி, 2008- ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது, கனடாவை, வெகு விரைவாக மீட்டு கொண்டு வந்த சாதனை படைத்தவர்.
இதன் காரணமாக 2013- ஆம் ஆண்டு இங்கிலாந்து வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1694- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கிலாந்து வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட அந்நாட்டைச் சோராத முதல் நபராக கார்னி இருந்தார். கார்னி எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் இங்கிலாந்திலும் பெரும் வெற்றி பெற்றன.
March 11, 2025 10:54 AM IST
அமெரிக்கா மீது பதிலடி வரி விதிப்பு… கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு