• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை.. மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்க மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை.. மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 11, 2025 12:43 PM IST

சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்தபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன் என்று தாய் கூறியுள்ளார்.

News18News18
News18

அமெரிக்காவின் அலபாமாவில், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த குழந்தை பிறந்த மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் செவிலியர் கூட குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் அதிர்ச்சியடையும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தப் பெண்ணின் பெயர் பமீலா மெய்ன். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், பர்மிங்காம் (Birmingham) பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பாரிஸ் ஹலோ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை அலபாமா கிராண்ட் வியூ மருத்துவ மையத்தில் சிசேரியன் மூலம் பிறந்தது. இந்த குழந்தை உலகிற்கு வந்ததும், பிரசவ அறையில் இருந்த அனைவரும் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தையின் தாய் பமீலா கூறுகையில், சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்தபோது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்ன நடந்தது என்று முதலில் எனக்குப் புரியவில்லை என்றார்.

அது என்னவென்றால், பெண் குழந்தையின் எடையைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் ஆச்சரியப்பட்டனர். பிறக்கும் போது பாரிஸ் 13 பவுண்டுகள் மற்றும் 4 அவுன்ஸ் எடை கொண்டது. கிலோ கிராமில், இது 6 கிலோவை விட சற்று அதிகம். அதேசமயம், பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தையின் சராசரி எடை 7 பவுண்டுகள் அல்லது 3.17 கிலோ ஆகும்.

Also Read: அமெரிக்கா மீது பதிலடி வரி விதிப்பு… கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு

மருத்துவமனையின் செவிலியர்கள் மீண்டும் மீண்டும் வந்து இந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்றும், பிறந்த 3 நாட்களில் குழந்தை மிகவும் பிரபலமடைந்து விட்டது என்றும் பமீலா நகைச்சுவையாக தெரிவித்தார். மேலும், பிரசவ தேதிக்கு 16 நாட்களுக்கு முன்பே குழந்தை பிறந்துவிட்டது. இந்த பிறந்த குழந்தை, 6 மாதக் குழந்தைக்கான ஆடைகளை அணிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பாரிஸ் அதிக எடை இருந்தாலும், உலகின் அதிக எடை கொண்ட குழந்தை என்ற பெயரை பெறவில்லை. கின்னஸ் உலக சாதனைகளின்படி, 1955ஆம் ஆண்டு இத்தாலியில் சுமார் 10 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையே உலகின் அதிக எடையுள்ள குழந்தையாக கருதப்படுகிறது.

First Published :

March 11, 2025 12:43 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவில் 6 கிலோ எடையுடன் பிறந்த பெண் குழந்தை.. மருத்துவர்கள், செவிலியர்கள் ஆச்சரியம்!

Read More

Previous Post

உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் | India is the second largest arms importer SIPRI data

Next Post

ஹோலி அன்று முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்கவும்: சர்ச்சையாகிய பீகார் பாஜக எம்.எல்.ஏ. பேச்சு | Makkal Osai

Next Post
ஹோலி அன்று முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்கவும்: சர்ச்சையாகிய பீகார் பாஜக எம்.எல்.ஏ. பேச்சு | Makkal Osai

ஹோலி அன்று முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்கவும்: சர்ச்சையாகிய பீகார் பாஜக எம்.எல்.ஏ. பேச்சு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin