02
சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறும் அணி பரிசு பெறும் நிகழ்வில் வெள்ளை நிற கோட் அணிவது வழக்கம். ஆனால், இந்த நடைமுறை சாம்பியன்ஸ் தொடரின் முதல் சீசனில் இல்லை. மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கோப்பையை தென் ஆப்பிரிக்கா வென்ற நிலையில், 2000-ஆம் ஆண்டு நடந்த 2-ஆவது தொடரில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா கோப்பையை இழந்தது. இதன் பின்னர், 2002-ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது தொடரில், இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. அப்போது இந்த வெள்ளை ஜாக்கெட் நடைமுறை இல்லை.


