• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் | Gold smuggling case: Actor Ranya Rao remanded to 14 days’ judicial custody

GenevaTimes by GenevaTimes
March 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யாவுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் | Gold smuggling case: Actor Ranya Rao remanded to 14 days’ judicial custody
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவை, பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32). தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக‌ ந‌டித்துள்ளார். கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர், கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்தபோது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்ய‍ப்பட்டார். பெங்களூருவில் உள்ள‌ ரன்யா ராவின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.

ரன்யா ராவ் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்த‌து. துபாய்க்கு மட்டும் 27 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரன்யா ராவ் பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தங்கம் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சில பெரிய நகை கடை அதிபர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

ரன்யா ராவ் மீது சர்வதேச அளவில் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரிக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் உள்ள வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் வேலையில் சிபிஐ அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், 3 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.



Read More

Previous Post

2023 O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

Next Post

‘நினைத்து பார்த்திட முடியாத ஸ்கோரை சன்ரைசர்ஸ் சாதித்தது’ – 2024 ஐபிஎல் நினைவுகளை பகிரும் நிபுணர்கள்

Next Post
‘நினைத்து பார்த்திட முடியாத ஸ்கோரை சன்ரைசர்ஸ் சாதித்தது’ – 2024 ஐபிஎல் நினைவுகளை பகிரும் நிபுணர்கள்

‘நினைத்து பார்த்திட முடியாத ஸ்கோரை சன்ரைசர்ஸ் சாதித்தது’ – 2024 ஐபிஎல் நினைவுகளை பகிரும் நிபுணர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin