Last Updated:
இந்தியா அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியை டிரம்பின் நடவடிக்கையால் குறைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிரம்பின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கான இறக்குமதி வரியை குறைக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்காவிடம் மிக அதிகமான வரியை வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் எந்தவித பொருட்களையும் விற்க முடியாத அளவிற்கான வரி வசூலிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
ஆனால், அவர்களின் அதிக வரியை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால், ஒரு வழியாக வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸில் அனுமதி.. நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு தரப்பு, முந்தைய கால ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளால் வரியை குறைக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரிகளை குறைத்து இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 09, 2025 7:24 PM IST


