Last Updated:
Mallar Kambam | மாற்றுத்திறன்களுடன் இணைந்து மல்லர் கம்ப வீரர்,வீராங்கனைகள் தங்களுடைய உடம்புகளை ரப்பர் போல் வளைத்து மல்லர் கம்ப சாகசங்களை செய்து அசத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பத்தில் செய்த சாகசங்கள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மூன்றாவது ஆண்டாக புத்தகத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் மாற்றுத்திறனாளிகள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மல்லர் கம்பம் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.
இதில், “ஊனம் ஒரு குறை இல்லை” என்பதை நிரூபிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பத்தில் அசத்தியது, புத்தகத் திருவிழாவை காண வந்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது. மல்லர் கம்பத்தில் பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை மல்லர் கம்பத்தில் திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து சினிமா பாடலுக்கு மாற்றுத்திறனாளிகள் நடனமாடி மகிழ்வித்தனர். மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகள் தங்களுடைய உடம்புகளை ரப்பர் போல் வளைத்து மல்லர் கம்ப சாகசங்களை செய்து அசத்தினர். இந்த சாகச விளையாட்டை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 09, 2025 6:22 PM IST

