அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இது அங்குள்ள இந்துக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய அரசு கலிஃபோர்னியாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலுள்ள ரன்தீர் ஜெய்ஸ்வால் “கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த வன்முறையை நாங்கள் பார்த்தோம். இத்தகைய அருவருப்பான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற இடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை நாங்கள் கோருகிறோம்.” என்று கூறியுள்ளார்.

