• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் இன்று… 25 ஆண்டுகள் சோகத்திற்கு நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் இன்று… 25 ஆண்டுகள் சோகத்திற்கு நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 09, 2025 7:05 AM IST

2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்றது போன்று 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியா வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Ind vs NZInd vs NZ
Ind vs NZ

உலகக் கோப்பையை போலவே மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒன்று தான். அதிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விழுப்புண்ணுக்கு பழி தீர்க்கும் வகையில், அதே அணியை மீண்டும் களத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும். கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் – இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. ஆனால், கிறிஸ் கெயின்ஸின் அதிரடி ஆட்டத்தால் கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து.

2019ல் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, 2021ல் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என முக்கியமான போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணியே வெற்றிபெற்றது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான், 2023ல் இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்தை பழி தீர்த்து இந்தியா.

இந்நிலையில், துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின் அதே நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவான அணியாகவே உள்ளது நியூசிலாந்து. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 2 சதத்துடன் 226 ரன்களும், வில்லியம்சன் 189 ரன்களும் குவித்து பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக உள்ளனர்.

இவர்களை தவிர வில் யங், ஃப்லிப்ஸ் போன்றோரும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். போதாக்குறைக்கு அணியின் கேப்டன் சான்ட்னர் பவுலிங்கில் துல்லியம் காட்டுவதும், பிரேஸ்வெல், கிளென் ஃப்லிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்றோரும் ஸ்பின்னர்களாக கிடைத்த வாய்ப்பை சுழற்ற கூடியவர்கள் என்பதும் அந்த அணியின் பலமாக உள்ளது.

ஆனால், இதற்கெல்லாம் சளைத்ததல்ல நம் இந்திய அணி. லீக் மற்றும் அரையிறுதி என 4 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டியில் களம் கண்ட இந்தியா, லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு பாடம் எடுத்த அனுபவத்தோடு இறுதி போட்டியையும் சந்திக்க உள்ளது. கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக உள்ள நிலையில், ஷுப்மன் கில் மீதும் இந்த போட்டியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக 4 சுழற்பந்துவீ

லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி அந்த அணிக்கு கடும் சவாலாக மாறக் கூடும். அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்றோரும் சுழற்பந்தில் சிறப்பான பங்களிப்பை செய்ய தவறவில்லை..

சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியை சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற நியூசிலாந்து, இந்த தொடரை கைப்பற்றும் முனைப்போடு களத்தில் உள்ள நிலையில், 2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை போன்று 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியா வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Location :

Chennai,Tamil Nadu

First Published :

March 09, 2025 7:05 AM IST

Read More

Previous Post

Puducherry Weather 9 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.36°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு | Gold price increases by Rs 80 per sovereign

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு | Gold price increases by Rs 80 per sovereign

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு | Gold price increases by Rs 80 per sovereign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin