Last Updated:
Revanth Reddy | விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம், தென் மாநிலங்களை பழி வாங்க பாஜக முயற்சி செய்வதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த போதும் அக்கட்சிக்கு தென் மாநிலங்களில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறினார்.
இதனால், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புவதாகக் கூறிய அவர், இந்த நடவடிக்கையால் வட மாநிலங்களுக்குதான் ஆதாயம் கிடைக்கும் என்றும் கவலை தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுனார்.
இதையும் படிங்க : மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு… கர்நாடக மாநில பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு!
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது மத்திய அரசின் திட்டம் என்றும் அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தியதாகவும் கூறிய ரேவந்த் ரெட்டி, வேண்டுமானால் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்ன என்பதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
March 08, 2025 2:40 PM IST
தொகுதி மறுசீரமைப்பு : தென் மாநிலங்களை பழி வாங்க பாஜக முயற்சி: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு


