Last Updated:
Ice Cream for Rs 1: மகளிர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மகளிர் தின விழாக்கள், உணவுகளுக்குச் சிறப்புச் சலுகைகள், ஆடைகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலார் கோவில் பகுதியில் உள்ள அன்னமித்தரா ஹோட்டலில் மகளிர் தினத்தை முன்னிட்டு 1 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மகளிர் தின விழாக்கள், உணவுகளுக்குச் சிறப்புச் சலுகைகள், ஆடைகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அன்னமித்ரா ஹோட்டலில் மகளிர் தினத்தை முன்னிட்டு அமுல் பிராண்டின் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் 1 ரூபாய்க்கு இன்று ஒரு நாள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Taraweeh Dua: ரமலான் நோன்பு சிறப்புத் தொழுகை… இரவு நேரத்தில் நடைபெறும் தராவீஹ் தொழுகை பற்றி தெரியுமா…
இது குறித்து கடையின் மேலாளர் கூறுகையில், “மகளிர் தினத்தைச் சிறப்பாக அனைவரும் கொண்டாட வகையில் இந்த சலுகையைக் கொடுத்து வருகிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 ரூபாய்க்கு ஜஸ்கிரீம் விற்பது இதுவே முதல் முறை. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தச் சலுகை வழங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி போன்ற ஜஸ்கிரீம் விற்கப்படுகிறது. சுவையாகவும், தரமாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
March 08, 2025 5:26 PM IST

