• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா? அடுத்த கேப்டன் யார்?

GenevaTimes by GenevaTimes
March 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா? அடுத்த கேப்டன் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 08, 2025 5:04 PM IST

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அவர் நீடித்து வருகிறார்.

ரோகித் சர்மாரோகித் சர்மா
ரோகித் சர்மா

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் கேப்டன் ரோஹித்சர்மா தனது பொறுப்பை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒருவேளை ரோஹித் சர்மா ராஜினாமா செய்தால் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக 2 பேரில் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்து தரப்பிலும் இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் அரை இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை அபாரமாக வீழ்த்தி நியூசிலாந்து அணி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

அந்த அணியின் கேன் வில்லியம்சன், கிளென் ஃபிலிப்ஸ், சான்ட்னர், ரச்சின் ரவிந்திரா உள்ளிட்ட வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி வருவதால் நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு சவாலாக இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஒருவேளை தோல்வி அடைந்தால் ரோஹித் சர்மா தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் பரவி உள்ளன.

ஒருவேளை அவர் ராஜினாமா செய்தால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட ஹர்திக் பாண்டியா அல்லது சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேப்டன்ஷிப்பை தவிர்த்து ரோஹித் சர்மா பேட்டிங்கில் மிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

இதனை விமர்சித்திருந்த முன்னாள் வீரர் கவாஸ்கர், “வெறும் 25-30 ரன்கள் எடுத்தால் மட்டும் போதுமா? என்பதை ரோஹித் சர்மா சிந்தித்து பார்க்க வேண்டும்” என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோராக 41 ரன்கள் உள்ளது. அதுவும் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த ரன்கள் எடுத்தவை ஆகும்.

இதையும் படிங்க – ICC Champions Trophy: சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

அதற்கு முன்பாகவும் ரோஹித் சர்மா தனது பேட்டிங் குறித்து விமர்சிக்கப்பட்டு வந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக அவர் நீடித்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

First Published :

March 08, 2025 5:04 PM IST

Read More

Previous Post

‘பெண்கள் பாதுகாப்புக்காக போராடிய தவெக தொண்டர்களை கைது செய்த போலீஸ்!’ திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!

Next Post

ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?   – Malaysiakini

Next Post
ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?   – Malaysiakini

ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?   – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin