தில்லி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்(சிஐஎஸ்எஃப்) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கிரண்(37), பணியில் இருந்தபோது காலை 8.44 மணிக்கு தனது சர்வீஸ் பிஸ்டலால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிரண் தனது சர்வீஸ் பிஸ்டலைப் பயன்படுத்தி விமான நிலையத்தின் டெர்மினல்-3 இல் உள்ள கழிப்பறைக்குள் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர் கூறினார்.

