Last Updated:
Maritime Boundaries: நாங்கள் எங்கே இருக்கிறோம், மழை இருக்கும் இடம், நீரோட்டம் அனைத்தும் இதில் பார்த்து அறிந்து கொள்வோம்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு போனில் மேப் பார்த்து செல்கிறோம். சில சமயங்களில் செல்லும் இடத்திற்கு அந்த மேப்பால் கூட சரியாக வழி காட்ட முடியாமல் திக்கு தெரியாமல் நின்று கொண்டிருந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
நிலப்பரப்பிலேயே இத்தனை குழப்பங்கள் இருக்கின்றது எனில் பரந்த கடலில் எவ்வளவு குழப்பங்கள் இருக்கும். அதில் மீனவர்கள் எவ்வாறு கடலில் சரியாகத் திசை அறிந்து பயணித்து மீண்டும் கரைக்குத் திரும்புகின்றனர். எல்லை தாண்டாமல் எப்படி மீன் பிடிக்கின்றனர், எல்லைகள், இருக்கும் தூரத்தை எவ்வாறு கணக்கிடுகின்றனர் என எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா…
அலைகளுடன் சவால் விட்டு எதிர்த்து மோதிச் சென்று திரும்பும் சாகசம் நிறைந்த தங்கள் பயணம் குறித்து மீனவர் கூறுகையில், “இங்கு பொருத்தப்பட்டிருக்கும் வயர்லெஸ் சேனல் மூலமாகத்தான் தருவைக்குளத்தில் உள்ள மொத்தப் படகுகளும் இந்த ஒரு சேனலில் தான் தொடர்பில் இருப்போம். தனிநபரிடமும் இதன் மூலம் பேசிக் கொள்ளலாம். மீன் பாடு, யார் யாருக்கு எவ்வளவு மீன் கிடைத்துள்ளது என்பதை இதன் மூலம் பேசிக் கொள்வோம்.
இதையும் படிங்க: Pest Control: உங்க வீட்டுல பல்லி, கரப்பான்பூச்சி தொல்லையா… இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்… 10 நிமிஷத்துல சரி பண்ணலாம்…
இதற்கு அடுத்தபடியாக இருப்பது ரேடார், இந்த ரேடார் மூலம் படகின் நிலை, நாங்கள் எங்கே இருக்கிறோம், மழை இருக்கும் இடம், நீரோட்டம் அனைத்தும் இதில் பார்த்து அறிந்து கொள்வோம். எவ்வளவு தூரத்தில் எத்தனை படகுகள் சென்றுகொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். போடும் வலையையும் இதன் மூலம் பார்த்துக் கொள்வோம். எவ்வளவு ஆழத்தில் எந்த பாகத்தில் வலை போடுகின்றோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு தருவைக்குளத்தில் இருந்து கிட்டத்தட்ட 800 மைல் வரை உள்ளே செல்வோம். இதன் மூலம் இந்தியா இலங்கை இடையே உள்ள சிலோன் பார்டரை அறிந்து கொள்ளலாம். அந்த பார்டருக்குள்ளே தான் தொழில் செய்வோம். 200, 300 மைல் உள்ளே சென்றாலே சூரை போன்ற மீன்களைப் பிடிக்கலாம், ஆழ்கடல் வரை சென்று மீன்பிடிப்பதுண்டு.
மேலும் எங்கள் கைகளில் சாட்டிலைட் மொபைல் போன் வைத்திருப்போம், அதன் மூலம் கரைகளில் இருப்பவரிடம் காற்றழுத்த, வானிலை அறிக்கை போன்றவற்றைத் தெரிந்து கொள்வோம். அதன் படி உள்ளே நகர்ந்து செல்வோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
March 07, 2025 3:21 PM IST

