Last Updated:
Elon Musk’s Starship | எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று நேற்று சோதனையின்போது வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஒன்று நேற்று சோதனையின்போது வெடித்து சிதறியது.
ஸ்பேஸ்எக்ஸ் அதன் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் மெகா-ராக்கெட் அமைப்பின் எட்டாவது ஒருங்கிணைந்த சோதனை பயணத்தை நேற்று நடத்தியது. இருப்பினும், ஏழாவது சோதனை பயணத்தைப் போலவே, எட்டாவது சோதனை பயணமும் தோல்வியடைந்து உள்ளது. அமெரிக்கா புளோரிடாவின் பஹாமாஸின் ஹாக் கேயில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. ராக்கெட் ஏவிய சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து ராக்கெட் வெடித்து சிதறியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
“Never give up” Elon Musk
Starship 8 debris pic.twitter.com/NseQxyEZWP— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) March 7, 2025
இதன் காரணமாக ஏற்பட்ட விண்வெளி குப்பைகளால், மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், ஆர்லாண்டோ மற்றும் பாம் பீச் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் வரை விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், இந்த விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களும் மாற்று விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. ராக்கெட்டின் சிதறிய பாகங்கள் கரீபியன் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று FAA உத்தரவிட்டுள்ளது. FAA இன் படி,பொது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிகழ்வின் மூல காரணத்தை கண்டறிவதற்கும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான சரியான நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
March 07, 2025 11:13 AM IST

